கமல் ஒரு கடவுள் அல்ல... காதி உடை கொடுத்ததில் அம்பலமாகிய உண்மை! பிக்பாஸ் போட்டியாளர் பகீர்

Report
0Shares

தமிழ் சினிமாவில் தன் தனித்தன்மையான குரலுக்குச் சொந்தக்காரர் சுசித்ரா.

இவர் சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்து இரண்டு வாரங்கள் கூட அங்கிருக்க முடியாமல் வெளியேறினார்.

இந்நிலையில் கமல்ஹாசன் குறித்து அவர் ஒரு விமர்சனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கமல்ஹாசன், பிக்பாஸ் –சீசன் 4 நிகழ்ச்சியின் போது பங்கேற்ற போட்டியாளர்களுக்கு தன் சொந்த செலவில் காதி துணியால் ஆன ஆடைகளை வழங்கினார்.

இதற்கு கமல்ஹாசன் காதி துணிக்கு வியாபார மதிப்பு கூட்டும் முயற்சி இது என்றார். இதுகுறித்து பாடகி சுசித்ரா கூறும்போது, எனக்குக் கொடுக்கப்பட்டது சிந்தடிக் ஆடைதான், ஆனால் அதைக் காதி என்று கூறினார்கள் என்று கூறிய அவர் கமல்ஹாசன் ஒரு கடவுள் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

loading...