ஆங்கிலம் பேச வராத மேனேஜரை அசிங்கப்படுத்திய பெண்கள்! கொதித்தெழுந்து கிழி கிழினு கிழித்த நெட்டிசன்கள் : வைரல் வீடியோ

Report
0Shares

பாகிஸ்தானில் உள்ள ஒரு பிரபலமான ஓட்டலின் உரிமையாளர்கள் இணையத்தில் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இஸ்லாமாபாத்தில் Cannoli by Cafe Soul என்ற உணவகத்தில் பணிபுரிந்து வரும் மேலாளர் ஆங்கிலத்தில் ஒழுங்காக பேசாததை உரிமையாளர்கள் வீடியோவாக வெளியிட்டு கேலி செய்துள்ளனர்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோவால் உணவக உரிமையாளர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த வீடியோ பாகிஸ்தானின் பத்திரிகையாளர் ராசா அஹ்மத் ரூமி (Journalist Raza Ahmad Rumi) என்பவரால் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த சம்பவம் சோகமானது, அந்த சூழ்நிலையை சமாளித்ததற்காக மேலாளருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும் வீடியோவில் உள்ள ஹீரோ மேலாளர் தான். அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் இதைச் சமாளித்ததற்காக அவருக்கு எனது சலாம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, இந்த உரிமையாளர்கள் தங்கள் உணவகத்தின் மேலாளரை கேலி செய்ததற்காக நெட்டிசன்களின் அவதூறு பேச்சுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் அந்த வீடியோவிற்காக மன்னிப்பும் கேட்டுள்ளனர்.