நடிகர் அரவிந்த்சாமி அவரது மகளுடன் சைக்கிளிங் செய்த புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் அரவிந்த்சாமி.
தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தவர், கடல் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
இதனையடுத்து தனி ஒருவனில் சித்தார்த் அபிமன்யூவாக அசத்தி இருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி உருவாகும் தலைவி படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடித்து வருகிறார்.
தற்போது அவருடைய டுவிட்டர் பக்கத்தில் மகளுடன் சைக்கிளிங் செய்யும் படத்தை பகிர்ந்துள்ளார்.
சமூகவலைத்தளத்தில் வைரலாகும் இப்படத்துக்கு பலரும் லைக்சுகளை குவித்து வருகின்றனர்.
Bicycle thieves ! 😊❤️ pic.twitter.com/cyCIcMtJMb
— arvind swami (@thearvindswami) January 24, 2021