பிக்பாஸில் கலந்து கொண்ட பிரபல நடிகை திடீர் தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி

Report
0Shares

பிரபல பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட மொழியில் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஜெயஸ்ரீ ராமையா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் பெங்களூரு சந்தியா கிரானா ஆஷ்ரமத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடையும் போட்டியாளர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் அமைவது வழக்கம்.

ஆனால் நடிகை ஜெயஸ்ரீக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காததால் விரக்தியடைந்து தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் தற்கொலை குறித்து ஜெயஸ்ரீ ராமையா வெளியிட்டிருந்த பதிவைப் பார்த்த கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் அவரை தேற்றினார்.

பின்பும் குடும்பத்திலிருந்து விலகியிருந்த அவர் ஆசிரமம் ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினர் தொடர்பு கொண்ட போது அழைப்பினை ஏற்காததால் சந்தேகத்தில் ஆசிரமத்திற்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

இதையடுத்து ஜெயஸ்ரீ ராமையா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை கொண்டிருப்பதை ஆசிரம நிர்வாகிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து மதனயகனஹல்லி பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.