பிக்பாஸ் போட்டியாளர்களுடன் அர்ச்சனாவின் மகள்... பதிவினைப் பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்

Report
0Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா.

பிக்பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனா, நிஷா, சோம், ரியோ மற்றும் கேபி ஒரு குழுவாக செயல்படுகின்றனர் என்று சில போட்டியாளர்கள் கமல்ஹாசன் முன்பே குற்றச்சாட்டு வைத்தனர்.

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் பலருக்கும் தேவையான சமயங்களில் அன்பு காட்டினார் என்பதை மறுக்க முடியாது. ஆனால் சில சமயங்களில் அவர் காட்டிய அன்பு ஒருதலைபட்சமாக இருக்கிறது என்றும் சில போட்டியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

தற்போது இப்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டது. இந்நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சோம் மற்றும் கடைசி வாரத்தில் வெளியேறிய கேபி இருவரும் அர்ச்சனாவின் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் அவரது மகள் சாராவுடன் அவர்கள் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பதிவிட்டு அர்ச்சனா கூறும்பொழுது "இந்த அழகிய டார்லிங்ஸ் என்னுடன் இருக்கும் பொழுது என் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

அர்ச்சனாவின் இந்த பதிவினை அவதானித்த ரசிகர்கள் சிலர் அவரைப் புகழ்ந்தாலும், சிலர் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

loading...