புகுந்த வீட்டிற்கு மகள் அழாமல் செல்வதற்கு தந்தை செய்த காரியம்... தீயாய் பரவும் அசத்தல் காட்சி

Report
37Shares

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். வாழ்வில் ஒருமுறை மட்டுமே நடக்கும் வைபோகம் தான் திருமணம். அதனால் தான் அன்றைய நாளின் நிகழ்வுகளை புகைப்படம், வீடியோ எடுத்து அழகாக சேமித்து வைத்துக் கொள்கின்றனர்.

அதிலும் இப்போதெல்லாம் சின்னத்திரையின் ரியாலிட்டி ஷோக்களுக்கு டப் பைட் கொடுக்கும் வகையில் திருமண வீடியோகிராபர்கள் சிந்திக்கின்றனர். இங்கேயும் அப்படித்தான் ஒரு அழகான இளம் ஜோடிக்கு திருமணம் நடக்கிறது.

அப்போது வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவர் மணமகளிடம் தன் தாய்க்கு ஒரு அன்பு முத்தம் கொடுக்கச் சொல்கிறார். அந்த இளம்பெண்ணும் தாயின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்கிறார். உடனே அவரது பக்கத்தில் நிற்கும் தந்தையும் அதேபோல் தன் மனைவிக்கு முத்தம் கொடுக்க முயன்றார்.

தன் மாமனார் ஆர்வமிகுதியில் செய்யும் செயலை பார்த்து மருமகனின் ரியாக்சன் இருக்கிறதே அதை வேற லெவல் என்றே சொல்லிவிடலாம். மணப்பெண்ணும் விழுந்து, விழுந்து சிரிக்கிறார்.

பெண்ணின் தந்தை திருமணத்துக்கு தன் மகளும், மனைவியும் மிகவும் பதட்டமாக இருப்பதைப் பார்த்துவிட்டு அந்த பதட்டத்தைத் தணிக்கத்தான் குறும்புதனமாக இப்படி செய்தாராம். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.