ஆரி ஒரு சாத்தானின் வக்கீல்.. படு மோசமாக திட்டிதீர்த்த சுசித்ரா; கொந்தளித்த ரசிகர்கள்

Report
484Shares

நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றிருந்தவர் சுசித்ரா.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த புதிதில் பரபரப்பான போட்டியாளராக இருந்த சுசித்ரா அதன் பின்னர் பாலாஜியின் எடுபிடியாக மாறிவிட்டார். அவருக்கு சப்போர்ட் செய்தே பேசி வந்தார்.

இதனால் உள்ளே போன வேகத்திலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். வெளியேறிய பின்னரும் சமூக வலைதளப் பக்கத்தில் பாலாஜிக்கு ஆதரவாகவே பதிவுகளை பதிவிட்டு வந்தார்.

அதன் பின்னர் திடீரென ஒருநாள் ஆரிக்கு ஓட்டளியுங்கள். அவர்தான் ரியல் ஹீரோ என கூறி தன்னுடைய 50 ஓட்டங்களையும் ஆரிக்கு அளித்ததாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், பதிவு ஒன்றில் உங்களுக்குத்தான் ஆரியை பிடிக்கும் அல்லவா என ரசிகர் கேட்டதற்கு எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது.

அவருடைய சில்லியான திமிர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் தான் திருப்தி அடையும்.

அந்த ஒரு காரணத்திற்காக தான் அவருக்கு சப்போர்ட் செய்தேன் அவர் சாத்தானின் வக்கீல் என சாடியுள்ளார்.

இதனால், சுசித்ராவின் இந்தப்பதிவால் ஆரி ரசிகர்களிடையே கோபத்தை உருவாக்கி உள்ளது. பலரும் சுசித்ராவை விமர்சனம் செய்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

loading...