ஆரி கமலின் கைக்கூலி... பாலா ஜெயித்திருந்தால் இது நடந்திருக்கும்! சீசன் 4 போட்டியாளரின் சர்ச்சையான பதிவு

Report
1118Shares

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதும், வெளியில் வந்த பின்பும் ஆரிக்கு ஆதரவாக பேசிய சுச்சி தற்போது அவரை மோசமாக பேசியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டைட்டில் வின்னராக ஆரியைக் குறித்து சுச்சி தரகுறைவாக பேசியுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் குறித்த நிகழ்ச்சி பற்றியும், கமல் பற்றியும், ஒரு சில போட்டியாளர்கள் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் சுச்சி.

ரசிகர் ஒருவர் சுச்சித்ராவிடம், ஆரியுடன் ஒரு செல்பி எடுத்து போடுங்க என்று கேட்டதற்கு, த்த்தூ, அதுக்கு நான் செத்தே போயிரலாம் என்று கூற, அதற்கு அந்த ரசிகர், உங்களுக்கு தான் ஆரி புடிக்குமே என்று சொல்ல ‘எனக்கு அவர புடிக்காது, அவர் இந்த சில்லி ஷோவை ஜெயித்தால் தன அவரது முட்டாள்தனமான திமிர் பூர்த்தியாகும், அதனால் தான் அவருக்கு சப்போர்ட் செய்தேன், சாத்தானின் வக்கீல்‘ என்று பதில் அளித்துள்ளார்.

இதற்கு ரசிகர் ஒருவர், அப்புறம் ஏன் ஆரிக்கு ஆதரவு தெரிவித்து எங்களை ஓட் போட சொன்னீங்க என்று கேட்டதர்க்கு, ஏனென்றால் அவர் கமலின் கைக்கூலி. பாலா ஏனென்றால் இருந்தார் அது அவருக்கு தீங்கு விளைவித்து இருக்கக்கூடும் என்று பதில் அளித்துள்ளார்.

சுச்சியின் இவ்வாறான சர்ச்சையான பதிவு ரசிகர்களை மட்டுமின்றி, சக போட்டியாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் ஆரி குறித்தும் அவருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்றும் ஆதரவாக பேசியவர் இவ்வாறு மாற்றி பேசுவதே முக்கிய காரணமாக உள்ளது.

loading...