வெற்றியைக் கொண்டாடது ஏன்? ரசிகர்களுக்கு ஆரி விடுத்த வேண்டுகோள்

Report
124Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரி தற்போது காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் இடம் பிடித்த ஆரிக்கு 16.5 கோடி வாக்குகளும். பாலாஜிக்கு 6.14 கோடி வாக்குகளும் கிடைத்திருந்தது.

பிக் பாஸ் பட்டத்தை வென்ற ஆரி,எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கே என்று பதிவிட்டிருந்தார்.

சமீபத்தில் உடல்நிலை சரியில்லை என்றும் என்னை மன்னித்துவிடுங்கள் கோபித்துகொள்ளாதீர்கள். விரைவில் உடல் நலம் சரியானதும் உங்களை சந்தித்து அனைத்து சமூக வலைத்தளத்திலும் பதில் அளிக்கிறேன் என்று கூறி இருந்தார்.

மேலும் ஆரியிடம் பலரும் வெற்றியை ஏன் கொண்டாடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது அந்த கேள்விக்கு ஆரி பதிலளித்து காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ஆரி கூறுகையில், பேட்டி என்னிடம் கேட்கும் கேள்வி, ஏன் வெற்றியை கொண்டாடவில்லை என்பது தான். இதை எப்படி கொண்டாடவேண்டும் என்ற கோரிக்கையை உங்களிடத்தில் நான் வைப்பது, முதியோர் இல்லத்திற்கும், அனாதை ஆசிரமத்திற்க்கும் ஒரு வேலை உணவு அளித்து கொண்டாடலாம், இல்லை ஒரு விதையை விதைத்து கொண்டாடலாம், இல்லை ஒரு இளநீரை வாங்கி அதன் மூலம் ஒரு விவசாயிக்கு நீங்கள் செய்யும் உதவியாக இதை கொண்டாடலாம் என்று கூறியுள்ளார்.

loading...