அடிக்கடி சித்ராவிடம் கூறிய அந்த மோசமான ஒற்றை வார்த்தை!.. தற்கொலைக்கு காரணம்; ஹேம்நாத் நண்பரின் அடுத்த பகீர்!

Report
1861Shares

நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட விஷயம் நாளுக்கு நாள் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.

அதில், நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத், ஒரு சைக்கோ, மனநல சிகிச்சை எடுத்தவர், சித்ராவை கொடூரமாக அடித்து சித்ரவதை செய்பவர், கன்னித்தன்மையை பரிசோதிக்க முடியுமா எனக் கேட்டவர் என்று சரமாரியாக குற்றம்சாட்டி வருகிறார் நண்பர் ரோகித்.

மேலும், பல நல்ல குணங்கள் கொண்ட சித்ராவின் நடத்தை குறித்து மோசமான தகவல்களை ஹேம்நாத் தரப்பு கசிய விடுவதன் நோக்கத்தை அம்பலப்படுத்தவே, தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாகக் கூறுகிறார் சையது ரோஹித்.

இதனிடையே, சித்ராவிற்கு கடன் பிரச்னை எதுவும் கிடையாது என்றும், சித்ரா எங்கு சென்றாலும் கூடவே செல்லும் பழக்கம் கொண்டவர் ஹேம்நாத் என்றும் கூறியுள்ளார்.

அடிப்படையில் ஹேம்நாத், பல பெண்களுடன் பழகி அவர்களை ஏமாற்றியவர் என்றும், மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார்.

சித்ராவிற்கு கடன் பிரச்னை எதுவும் கிடையாது என்றும், சித்ரா எங்கு சென்றாலும் கூடவே செல்லும் பழக்கம் கொண்டவர் ஹேம்நாத் என்றும் கூறியுள்ளார்.

சித்ராவைக் காதலிக்கத் தொடங்கியதில் இருந்து அவரது நடத்தையை சந்தேகப்பட்ட ஹேம்நாத், அதன் அடிப்படையிலேயே பலமுறை சித்ராவை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளார் என்றும் குற்றம்சாட்டுகிறார்.

அதன்பின்னர், இவர்களுக்குள் அதிகமாக சண்டை வருவதற்கு காரண்மே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ரா நெருக்கமாக நடித்ததும், பின்பு ஹேம்நாத் பத்தினிகள் எல்லாம் தப்பு பண்ணா செத்துருவாங்க என அந்த ஒரு வார்த்தை திரும்ப திரும்ப கூறியதுமே சித்ராவின் மன அழுத்ததை உருவாக்கியதாக கூறுகிறார்.

அப்புறம் ஏற்காடு ட்ரிப் போறதுக்கு முன்ன தான் பாண்டியன் ஸ்டோர் first night சீன் எடுக்கப்பட்டதாகவும், அதைக்கேட்டறிந்த ஹேம்நாத் சித்ராவை பயங்கரமாக தாக்கியதாகவும், கூறப்படுகிறது.

loading...