பிக்பாஸிற்கு பின்பு ரசிகருக்கு ஆரி கொடுத்த சர்ப்ரைஸ்.... செம்ம வைரலாகிய காணொளி

Report
517Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். ஆரிக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உருவாகி விட்டனர் என்றே சொல்லலாம். இதற்கெல்லாம் முக்கிய காரணம் அவரது நேர்மையும் மனவுறுதியும் தான்.

இப்படி பிரபலங்கள் மற்றும் வெகுஜன மக்களை கவர்ந்திழுத்த ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எப்போது மக்களை சந்திக்க வருவார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். ஆனால் அவரது உடல்நிலை தற்போது சரியில்லாத காரணத்தால் விரைவில் லைவில் வருவார் என்று தெரிகிறது.

இந்நிலையில் ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சர்ப்ரைஸாக வருகை தந்துள்ளார் ஆரி. இந்த வீடியோ தற்போது சலுகை வலைத்தளங்ககளில் வைரலாகி வருகிறது. ரசிகரின் பிறந்தநாளுக்கு தான் அப்படி சர்ப்ரைஸாக வீட்டுக்கு வந்துள்ளார். அவரை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுடன் கேக் வெட்டி கேக் ஊட்டி விட்ட பின்பு அவரை கட்டியணைத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பார்ப்பதர்க்கே 'என்ன மனுஷன்யா இவரு' என்று புல்லரிக்கிறது. மேலும் அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அதன் பின்பு கிளம்புகிறார். ஆனால் அவரை பார்க்கும்போதே அவர் சோர்வாக இருக்கிறார் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. ஆனாலும் தனது ரசிகருக்காக இப்படி அவர் செய்திருப்பது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

loading...