பிக் பாஸ் முடிந்த கையோடு மருத்துவமனையில் இருக்கும் கமல்! அக்கறையாக ஆரி செய்த செயல்? நடந்தது என்ன?
நடிகர் கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில் அவருக்கு அக்கறையாக பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி மெஸேஜ் அனுப்பியுள்ளார்.
நிகழ்ச்சியின் இடையில் பேசிய கமல், காலில் அறுவை சிகிச்சை செய்யப்போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார் கமல்.
அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னரான ஆரி, நடிகர் கமல் விரைவில் நலம் பெற வேண்டி டிவிட்டியுள்ளார்.
அவர் பதிவிட்டிருப்பதாவது, அன்பார்ந்த கமல் சாருக்கு உங்கள் உடல்நலம் சீக்கிரமாக குணமடைந்து நீங்கள் மேலும் பல உயரங்களும் சாதனைகளையும் செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை இதுவரை 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.