நான்கு மாதங்கள் கழித்து பிக் பாஸ் போட்டியாளர்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்க ஆரம்பித்து இருக்கின்றனர்.
அந்த வகையில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்று முக்கிய போட்டியாளராக மாறிய அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து மெசேஜ் சொல்லி இருக்கிறார்.
அதில் ''உங்களை திணறடிக்கவும், உங்கள் சிறகுகளை முடக்கவும் முயற்சி செய்வார்கள்.
ஆனால் நீங்கள் உயர்ந்த வல்லமை கொண்டவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எதுவும் அதை தடுக்க முடியாது,'' என தெரிவித்து இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.