வீடியோவில் வந்து ஆரி கூறியதை கேட்டு அதிர்ச்சியில் பதறி போன ரசிகர்கள்! மன்னித்து விடுங்கள்.. தீயாய் பரவும் புதிய வீடியோ

Report
2755Shares

ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எப்போது மக்களை சந்திக்க வருவார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர்.

பலரும் அவரது பதிவுகளில் எப்பொழுது எங்களை சந்திக்கப் போகிறீர்கள் என்று கேட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் "உங்களையெல்லாம் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக காத்திருந்தேன். ஆனால் டிக்கெட் டு பினாலே நாளிலிருந்தே எனக்கு உடல்நிலை சரியில்லை. இன்னும் சரியாகவில்லை.

சீக்கிரம் உங்களை சந்திக்க வரவேண்டும். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

வெகுவிரைவில் உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் சொல்வேன். இது என்னுடைய வெற்றி அல்ல, நேர்மைக்கும் உண்மைக்கும் நீங்கள் கொடுத்த வெற்றி.

ஒரு சகோதரனாக உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து என் அன்பை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆரிக்கு என்ன ஆச்சி என்று பதறி போயுள்ளனர்.

loading...