பிக்பாஸ் ஆரியை பிராடு என கூறிய மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ!

Report
589Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் டைட்டில் வின்னரான ஆரிக்கு பல ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில், முன்னாள் போட்டியாளரான மீரா மிதுன் திட்டி ட்வீட் போட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், அந்த பதிவில், டேய் பிராடு, ஆரிலாம் ஒரு ஆளே இல்ல. பெய்லியர், வேலைக்கு ஆகாத பார்ட்ஸ் டேமேஜ் ஆன வயசான ஆளு. பில்டப் கொடுக்காதீங்க அல்லகைகளா என மோசமாக பேசியுள்ளார்.

அதன் பின்னர், பாலாஜி முருகதாஸ்தான் ரியல் வின்னர். ஆரி பிராடு. பாலாஜி ஆரம்பத்திலிருந்து உனக்கு எதிராக நடக்கும் விஷயங்களை நான் சொல்லி வருகிறேன் என கூறியுள்ளார்.

இதனைக்கண்ட ரசிகர்கள் நெட்டிசன்கள் அனைவரும் படுமோசமான வார்த்தைகளால் மீரா மிதுனை திட்டி ட்ரோல் வீடியோவைவும் வெளியிட்டு வருகின்றனர்.

பலரும், மீரா மிதுன் விளம்பரம் தேடுவதற்கு இதுதான் கிடைத்ததா? உனக்கு வேற வேலையை இருந்தா பாரு என நக்கலாகவும் பதிலளித்து வருகின்றனர்.