அவ இதையும் செஞ்சிருக்கா டா.. நண்பருடன் அடுத்த ஆடியோ காலில் உளறிய ஹேமந்த்.. திடுக்கிடும் தகவல்!

Report
869Shares

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை விஷயம் இன்று வரை நாளுக்கு நாள் புது புது விஷயங்கள் வெளிவர தொடங்கியுள்ளது.

ஏற்கனவே அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமின் கோரப்பட்ட நிலையில், ஹேமந்தின் 10 வருட நண்பரான சையது ரோஹித், ஹேமந்தின் ஜாமினுக்கு எதிரான தனது மனுவைத் தாக்கல் செய்து அதிரவைத்தார்.

மேலும், அத்துடன் கூடவே ஒரு ஆடியோவையும் வெளியிட்டார். இந்நிலையில் இதுபற்றி பிரபல சேனலுக்கு அளித்த பேட்டியில்.

ஒரு ஆடியோவை பகிர்ந்தார். அதில், அத்துடன் சித்ரா இறந்த 2வது நாளே ஹேமந்துடன் பேசி, அந்த ஆடியோவை பதிவு செய்ததாகவும், இதுபற்றி கோர்ட்டில் மனு அளித்ததாகவும் ரோஹித் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவர் பகிர்ந்துள்ள அந்த முழுமையான ஆடியோவில், ரோஹித்திடம் ஹேமந்த் சில விஷயங்களை பேசுகிறார். அதில், போலீஸ் அனைத்து ஆடியோக்களையும், தன் போனையும் கூட எடுத்துக் கொண்டதாகவும், 4 நாட்களாக சாப்பிடாமல் அழுததாகவும் குறிப்பிடுகிறார்.

இதையடுத்து, சித்ரா இறந்த அன்று தங்களுக்குள் சண்டையே கிடையாது என்று கூறிய அவர், சித்ராவின் அம்மாவிடம் தான் ஒரு காலத்தில் மோசமாக நடந்துகொண்டதைச் சொன்னதால், சித்ராவின் அம்மாவுக்கும் சித்ராவுக்கும் தகராறு எழுந்துள்ளதாக குறிப்பிடுகிறார்.

அதனால் தாயார் வீட்டுக்கு செல்ல முடியாது என்பதை இறப்பதற்கு முதல் நாள் இரவு சித்ரா ஹேமந்துடன் பகிர்ந்துள்ளார்.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சித்ரா தனியாக சென்றுவந்ததாக ரோஹித்திடம் கூறும் ஹேமந்த், சித்ரா அறைக்கு வந்தும் சோகமாக இருந்ததாகவும், அப்போது சக நடிகருடன் ஆடியது பற்றி சித்ராவிடம் ஹேமந்த்திடம் கூறியதாகவும், அதற்கு ‘ஏன் பட்டு இப்படி பண்ற?’ என செல்லமாய் கோபித்துக் கொண்டு தம் அடித்துவிட்டு சென்றதாகக் கூறுகிறார்.

அப்போது அறைக்கதவைத் தாழிட்டுக் கொண்ட சித்ரா தற்கொலை செய்துகொண்டதாகவும், தங்கம் கதவ திற என, தான் கேட்டதாகவும் ஹேமந்த் கூறியிருக்கிறார்.

அந்த அறையில் மின்விசிறி இருந்ததாகவும், அனைவர் முன்னிலையும் தைரியமாய் இருக்கும் சித்ரா, யாரும் இல்லையென்றால் மூலையில் உக்காந்தோ, காரில் உட்கார்ந்தோ தனியாக அழுவார் என்றும் ஹேமந்த் ரோஹித்திடம் கூறுகிறார்.

மேலும், பேசிய ஹேமந்த், சித்ராவிடம் நிறைய பேர் என்ன பத்தி சொல்லிருக்காங்க. ஆனா யார்னு எங்கிட்ட சொல்ல மாட்டா கல்லுளி மங்கி அவ. தற்கொலை பண்ணிக்கிட்ட அன்னைக்கு நான் சித்ராவுடன் சண்டை போட்டிருந்தா கதவ பீஸ் பீஸா உடைச்சுருப்பேன்.

உனக்கு என் புத்தி தெரியும்ல? ரோஹித் ஆனால் என் விரல் கூட அவ மேல படல. அவ யார் கூடயோ சேர்ந்து கஞ்சா அடிச்சிருக்கானு ஒரு சந்தேகம் இருக்கா.

கடைசி ஒரு 3 நாளா சித்ராவை பணம் கேட்டு சித்ராவின் தாயார் சித்ராவை வெச்சு செஞ்சுட்டார். அதுவும் அவளோட மன உளைச்சலுக்கு காரணம். அன்னைக்கு நான் அடிக்கவே இல்லை.

புரிஞ்சுக்கோ. சித்ராவின் இறப்புக்கு முன்னரே அவருடைய தலையில் அடிபட்டிருக்கு. சித்ரா என்னை சுத்தியே தான் இருப்பா. தியாகி மாதிரி செத்துட்டா. பைத்தியகாரி.

இதையெல்லாம் யாரிடமும் சொல்லக் கூடாது. நான் என்னை நிரூபித்துவிட்டு நானும் செத்துடுவேன் டா.. என்று வாட்ஸ் ஆப் காலில் பேசியுள்ளார். சைபர் போலீஸார் இந்த ஆடியோவை கைப்பற்றினர்.

மேலும் இதுபற்றி பல்வேறு விஷயங்களை பதிவு செய்துவரும் ரோஹித், சித்ராவை ஹேமந்த் ரத்தம் வரும் அளவுக்கு அடித்து துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

loading...