பிக்பாஸிற்கு பின்பு அனிதா போட்ட பதிவு... குஷியில் சனம் கூறியது என்ன தெரியுமா?

Report
940Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடியதில் ரொம்ப போல்ட் ஆகவும் தைரியமாகவும் விளையாடி வீட்டை விட்டு வெளியே வந்த அனிதா சம்பத்தும் சனம் ஷெட்டியும் அந்த வீட்டிற்குள் ஒற்றுமையாக தான் வலம் வந்து கொண்டிருந்தனர்.

தற்போது அனிதா சம்பத் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் வெளியிட்டிருக்கிறார் அதைப் பார்த்து அதற்கு சனம் கமெண்ட் போட்டிருக்கிறார் .இந்த இந்த போட்டோஸ்கள் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

சனம் ஷெட்டியும் ஆரம்பத்திலிருந்து அனைவருடனும் பாசமாக இருக்கும் நிலையில் பாசமாகவும் தனது உரிமைக்காக கொஞ்சம் சண்டை போட்டுக்கொண்டும் இருந்து கொண்டிருந்தார்.

இதனால் இவரை ரசிக்கும் ரசிகர்கள் அளவிற்கு வெறுக்கும் ரசிகர்களும் இருந்தனர் .அதனால் இவரும் பாதியிலே இந்த வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார் .இவர்கள் இருவருக்கும் தற்போது பிக் பாஸ் ஃபைனலின்போது கொடுத்த விருதுகளோடு போட்டோ எடுத்திருக்கிறார்கள் .இந்த போட்டோவை தற்போது அனிதா சம்பத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த போட்டோவை பார்த்து மெய்சிலிர்த்து போன சனம் ஷெட்டியும் தன்னுடைய பங்குக்கு ஒரு கமெண்டை போட்டிருக்கிறார்.

அதில் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் நான் பார்த்ததிலே தைரியமான மற்றும் நேர்மையான பெண் நீங்கள்தான் வாழ்க்கையில் சந்தோசமாக இப்படியே இருக்க வேண்டும் என்றும் உங்கள் கணவருடன் ரொம்ப சந்தோசமாக வாழவேண்டும் என்றும் என்னுடைய பெஸ்ட் பிரண்டு என்றுமே நீங்கள் தான் என்றும் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார்.

சனத்தின் இந்த கமெண்டுக்கு அனிதா சம்பத்தும் தேங்க்ஸ் டியர் என்று கூறியிருக்கிறார். இவர்களைப் பார்த்ததும் மேலும் குஷியாகி போன ரசிகர்கள் நீங்கள் இரண்டு பேரும் மட்டும் தான் நிஜமான சிங்கபெண்கள் நீங்கள் தான். உண்மையாகவே உங்களது கேரக்டரில் இருந்திருக்கிறீர்கள் என்று கூறுகிறார்கள்.


loading...