நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வென்ற நிலையில் இரண்டாம் இடம் பிடித்து இருந்தார் பாலாஜி முருகதாஸ்.
வீட்டில் இருக்கும்போது தான் அவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் உலா வரும் என்றால் தற்போது அவர் வெளியில் வந்த பிறகு சர்ச்சைகள் தொடர்கிறது.
பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக இருக்கும் போது பல்வேறு மோசமான விஷயங்களில் ஈடுபட்டார் பாலாஜி முருகதாஸ்.
அதில், பாலாஜி பவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது சனம் ஷெட்டியுடன் சண்டை போட்டு இருந்தார்.
அவர் அழகி போட்டியில் வெற்றி பெற்றது சில சமரசங்களை செய்து தான் என அவர் கூறினார்.
மேலும், அந்த நிறுவனம் டுபாக்கூர் கம்பெனி என கூறினார். அதை வெளியில் வந்து நான் நிரூபிக்கிறேன் என்றும் சவால் விட்டார் பாலாஜி.
இதையடுத்து, சனம் ஷெட்டி casting couch செய்து தான் ஜெயித்தார் என பாலாஜி சொன்னது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.
ஆனால் விஜய் டிவி இது பற்றி எந்தவிதமான விஷயங்களை வெளியிடாமல் சர்ச்சையை அப்படியே மூடி மறைத்துவிட்டது.
இதனிடையே, சனம் செட்டி வெற்றிபெற்ற அழகிப் போட்டியை நடத்திய நிறுவனத்தின் உரிமையாளர் ஜோ மைக்கேல் என்பவர் பாலாஜிக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக ஜோ மைக்கேல் அப்போதே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பாலாஜி பற்றி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் ஜோ மைக்கேல் அவரை விமர்சித்து இருக்கிறார்.
அவருக்கு வாட்சப்பிலும் லீகல் நோட்டீசை அவர் அனுப்பி வைத்திருக்கிறார். அதை பாலாஜி படித்தும் விட்டார்.
அதில், "தம்பிங்களா.. 2 நாள்ல சிங்கம் வரும்னு சொன்னாங்க.. எங்கயாவது பாத்தீங்களா. இதுல தனுஷ் சார் டைலாக் வேற.."
"லீகல் நோட்டீஸ் அவரது பர்சனல் நம்பருக்கு அனுப்பப்பட்டு விட்டது. பயில்வான் சார் பயப்படாம proof காட்டுங்க உள்ள சொன்னதுக்கு. அப்படி இல்லைனா நீங்க தான் அதுனு (டுபாக்கூர்) கன்பார்ம்" என ஜோ மைக்கல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Thambingala... 2 days La Singam varum nu sonnangaa😉 Engayavadhu parthingala😇
— JoeMichael (@RazzmatazzJoe) January 19, 2021
Idhula dhanush sir dialogue vera🤣🤣
Legal notice even delievered to his personal number :)
Baiyilvaan sir Bayapadama Proof kaaatungaaa ulla sonnadhuku... appdi illana neenga dhan adhunu confirm😉 pic.twitter.com/JVHsXN33RR