பிக்பாஸ் சாம்பியன் ஆரிக்கு அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்

Report
2002Shares

பிக்பாஸ் சீசன் 4 வின்னரான ஆரி போலீஸ் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடந்து முடிந்த சீசன் 4ல் 16 கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வின்னரானார் ஆரி.

அவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கையோடு புதுப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

அபின் இயக்கும் அந்தப் படத்தில் ஆரி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கலந்து கொண்டார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

loading...