சாலையோரக் கடையில் மாஸ்க் அணிந்து சென்ற அஜீத்... விரும்பி சாப்பிட்ட உணவை என்ன செய்தார் தெரியுமா?

Report
643Shares

வாரணாசியில் சாலையோரக் கடை உரிமையாளரோடு அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு தனது நண்பர் குழுவுடன் சென்றுள்ள அஜீத், அங்குள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்த அஜித் அங்கே அருகில் இருந்துள்ள செய்த சாலையோர கடை ஒன்றில் நுழைந்து இருக்கிறார்.

தலையில் தொப்பி மற்றும் முகத்தில் முகக்கவசம் அணிந்திருந்ததால் அஜித்தை முதலில் அடையாளம் தெரியவில்லை.

பின்னர் சாப்பிடுவதற்காக முகக் கவசத்தை நீக்கிய போது தான் அந்த கடைக்காரர் அஜித்தை அடையாளம் கண்டுள்ளார்.

இது குறித்து அந்த கடையின் உரிமையாளரான சுபம் கேசரி கூறியதாவது, அவர் எங்கள் கடைக்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பனாரஸ் சாட் வகைகள் அனைத்தையும் அவர் ரசித்து சாப்பிட்டார். அவருக்கு அவை மிகவும் பிடித்துப் சாப்பிட்டார்.

அதனால் அடுத்த நாளும் எங்கள் கடைக்கு வந்தார். மற்ற சுற்றுலாப் பயணிகளைப் போலவே அவரும் சாலையில் நின்று கொண்டே சாப்பிட விரும்பினார். உணவு தயாராகும் முறை கேட்டுத் தெரிந்து கொண்டு அவற்றை தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டார் என்று கூறியுள்ளார் அந்த கடை உரிமையாளர்.

loading...