பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸின் முதல் பதிவு: என்ன சொல்லியிருக்கிறார்?

Report
1383Shares

பிக்பாஸ் சீசன் 4ன் ரன்னர்அப்பான பாலாஜி முதன்முறையாக சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்டுள்ளார்.

சுமார் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட பிக்பாஸ் சீசன் 4 நேற்றுடன் நிறைவுக்கு வந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஆரி, பாலாஜி, ரியோ, ரம்யா மற்றும் சோம் ஆகிய 5 பேர் ஃபைனலிஸ்ட்டுகளாயினர்.

பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் நடந்து முடிந்த சீசன் 4ல் வெற்றியாளரானார் ஆரி.

பாலாஜி ரன்னர் அப் ஆனார், இந்நிலையில் அவருடைய இன்ஸ்டாவில் முதன்முறையாக கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், எனக்கு விழுற ஒரு ஒரு ஓட்டும் கப்புதான் என போட்டோவுடன் ஷேர் செய்துள்ளார்.

மேலும் இந்த அற்புதமான பயணத்தில் என்னை ஆதரித்த எனது ரசிகர்கள் அனைவருக்கும், மேலும் கடினமாக உழைக்கவும், சிறப்பாக இருக்கவும் என்னைத் தூண்டிய என் சந்தேக நபர்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

உங்கள் நேரம், அன்பு மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜிக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

loading...