பிக்பாஸ் சுரேஷ் தாத்தாவுக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படி பதிவிட்டார்?

Report
827Shares

பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தியின் பதிவை பார்த்த ரசிகர்கள், யார் அவரை மிரட்டியது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நேற்று மிக பிரம்மாண்டாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4ன் இறுதிப் போட்டியில், ஆரி வெற்றியாளரானார்.

இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர், பிக் பாஸ் வீட்டில் கடைசி வாரத்திலும் வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தனர்.

இவர்களில் கடைசியாக சென்றவர் சுரேஷ் சக்ரவர்த்தி, இவருக்கு கடைசிவரை நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு செல்லவில்லை என தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில் சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 'சட்டம், ஒப்பந்தங்கள் சில நேரங்களில் நம்மை மிகவும் காயப்படுத்தும்.

ஆனால் ஆண்டவர் போன்ற தூய உள்ளங்கள் நமக்கு நல்ல மருந்தாக உள்ளது. நன்றி தலைவரே ' என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவால் அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் 'பிக்பாஸில் சுரேஷ் ஒப்பந்தங்களை காட்டி மிரட்டப்பட்டாரா?' என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


loading...