பிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரி வெளியிட்ட முதல் கருத்து... கொண்டாடும் ரசிகர்கள்

Report
1159Shares

நேற்றைய தினத்தில் கோப்பையை தட்டிச் சென்ற ஆரி முதன்முதலாக தனது கருத்தினை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த நிகழ்ச்சி பிக்பாஸ். பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்த 4வது சீசன் மக்களின் ஆதரவை பெற்றதோடு பயங்கரமாக சூடுபிடிக்கவும் செய்தது.

இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்தே சுவாரசியம் குறைவாக இருந்த நிலையில் அவ்வப்போது பாலா, ஆரி இருவருக்கும் இடையே அரங்கேறிய சண்டை ரசிகர்களை சற்று மிரள வைத்ததோடு சுவாரசியத்தையும் கொடுத்தது.

இந்த பிக்பாஸ் 4வது சீசனின் வெற்றியாளராக ஆரி தேர்வு செய்யப்பட்டுள்ளார், மக்களும் கொண்டாடினார்கள்.

டைட்டிலை வென்ற ஆரி தனது டுவிட்டர் பக்கத்தில் முதல் பதிவாக பிக்பாஸ் கோப்பையை கையில் வைத்துக் கொண்டு எல்லாப் புகழும் இறைவனுக்கே என பதிவு செய்துள்ளார்.

loading...