அப்பாவும் அம்மாவும் இப்போது இல்லை! மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்ட ஆரி : மகிழ்ச்சியான தருணத்தில் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

Report
488Shares

பிக்பாஸ் டைட்டில் வின்னரான ஆரி யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என மேடையில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய பிக்பாஸ் ஃபினாலே கொண்டாட்டம் நள்ளிரவு 12 மணி வரை சென்றது.

பின்னர் பெரும் சஸ்பென்ஸுக்கு பிறகு வின்னரை அறிவித்தார் கமல். தான் வின்னர் என்று கேட்டதும் கண்கள் கலங்கிய ஆரி உருக்கமாக பேசினார். அதாவது, உங்களின் அனுமதியுடன் நான் இரண்டு பேரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கமலிடம் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆரி, பேச்சாலும் உடல்மொழியாலும் என்னுடைய செயலாலும் உங்களை காயப்படுத்தியிருந்தால் உங்களிடம் உங்கள் குடும்பத்தாரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என மேடையில் விழுந்து மக்களிடமும் சக போட்டியாளர்களிடமும் மன்னிப்பு கேட்டார்.

சக போட்டியாளர்கள் இல்லாவிட்டால் தான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது என்றும் கூறினார். மேலும் 5ஆம் வகுப்புக்கு பிறகு நான் முதல் இடம் வாங்கவே இல்லை. இப்போது முதல் ரேங்க் வாங்கி முதல் இடத்திற்கு வந்துள்ளேன். கப்பு கொடுத்திருக்கிறீர்கள்.

ஆனால் ரேங்க் கார்டில் கையெழுத்து போடும் அப்பாவும் அம்மாவும் இப்போது இல்லை. நான் முதலிடம் பெற்றால் அதனை பார்த்து சந்தோஷப்படும் அவர்கள் இல்லை. ஆகையால் உங்களையும் எனக்கு வாக்களித்த மக்களையும் என் அப்பா அம்மாவாக நினைத்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறேன் என்று கமலின் காலில் விழுந்தார் ஆரி.

இதனை தொடர்ந்து ஆரிக்கு டைட்டில் வின்னர் ட்ரோஃபியை கொடுத்த கமல், இந்த கப்பை நானே வாங்கியது போன்ற பெருமை கொள்கிறேன் என்றார். அப்போது பேசிய ஆரி, நீங்கள் கூறினீர்கள் தப்புன்னா தட்டிக்கேட்பேன், நல்லதுன்னா தட்டிக் கொடுப்பேன் என்று, அதேபோல் தப்புன்னா தட்டிக் கேளுங்க நியாயம்னா நிமிர்ந்து கேள் என மக்களுக்கு கூறினார்.

அதன் தொடர்ச்சியாக மற்ற போட்டியாளர்களுக்கு கொடுத்ததை போன்றே ஆரிக்கும் பிக்பாஸின் விருது கொடுக்கப்பட்டது.

மோட்டிவேட்டர் ஆரி என்ற விருது ஆரிக்கு வழங்கப்பட்டது.

loading...