பிக்பாஸ் டைட்டிலை வென்றார் ஆரி! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மனைவி! தெறிக்க விடும் ரசிகர்கள்

Report
1538Shares

அதிகாரப்பூர்வமாக பிக்பாஸ் டைட்டிலை ஆரி இன்று வென்றே விட்டார். அவர் மனைவி மகிழ்ச்சியில் வாழ்த்து கூறினார்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களால் அதிகம் நாமினேட் செய்யப்பட்ட ஆரி, இறுதிப்போட்டி வரை முன்னேறி டைட்டிலையும் தற்போது வென்று வெற்றிவாகை சூடி இருக்கிறார்.

சோம், ரம்யா, ரியோ, பாலாஜி, ஆரி என மொத்தம் 5 பேர் இறுதிப்போட்டியில் எண்ட்ரி ஆகினர்.

இதில் சோம் 5-வது இடத்தையும், ரம்யா 4-வது இடத்தையும், ரியோ 3-வது இடத்தையும் பிடித்தனர்.

கடைசியில் பாலாஜி, ஆரி இருவரையும் பிக்பாஸ் மேடைக்கு கமல் அழைத்து வந்தார்.

பெருவாரியான மக்கள் வாக்குகளை வென்ற ஆரி பிக்பாஸ் டைட்டிலை வெல்ல, பாலாஜி ரன்னர் அப்பாக தேர்வானார்.

loading...