சோம், ரம்யாவைத் தொடர்ந்து பிக்பாஸிலிருந்து வெளியேறிய ரியோ... கமல் கொடுத்த அசத்தலான பரிசு

Report
761Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக் கொண்டாட்டம் தொடங்கியுள்ள நிலையில் வெற்றியாளரை அறிவிக்கும் கமல் கம்பீரமாக நடந்து வந்து மக்களை மகிழ்வித்துள்ளார்.

மேலும் இதில் கலந்து கொண்ட ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் பிக்பாஸ் தனது பாணியில் மக்களுக்குக் கூறி வரவேற்றுள்ளது.

கமல் தனது கையில் மக்கள் தீர்ப்பினை கொண்டுவந்துள்ள இத்தருணத்தில் உள்ளே ஐந்து போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் சோம் முதலிலும் ரம்யா இரண்டாவதாகவும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி கடந்த வாரங்களாக சோகத்தின் உச்சத்தில் இருந்த ரியோ மூன்றாவதாக வெளியேற்றப்பட்டுள்ளார். நேற்றைய தினம் கமல் ரியோவை ரீசார்ச் செய்வதற்கு பல யுக்திகளை கையாண்ட போதிலும் ரியோ அசறாமல் அதே சோகத்தில் இருந்தவர் தற்போது வெளியேறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கமல் தனது சார்பாக பரிசுகளை உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார். இதில் ரியோவை முதலில் அழைத்து பரிசினை அவதானிக்க கூறினார். அப்பொழுது காட்டுக்குள் செல்ல வேண்டும் என்று ரியோ கூறியதால் அவருக்கு காம்பஸ் ஒன்றினை கமல் பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.

loading...