கோடி வாக்குகளில் பிக்பாஸ் டைட்டிலை தட்டிதூக்கிய ஆரி!.. அடுத்தடுத்த இடங்களில் இவர்களா? வெளியானது முழு லிஸ்ட்!
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 105 நாட்களை கடந்து இன்றுடன் நிறைவடைகிறது. இதில், இறுதிக்கட்டத்தில், சோம், ஆரி, பாலா, ரம்யா பாண்டியன், ரியோ இடம்பெற்றனர்.
இதையடுத்து, யார் வெற்றிபெறுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், ஆரம்பத்தில் இருந்தே ஆரிக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இருந்து வந்தது.
இதனால், ஆரி 11 கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று பிக்பாஸ் டைட்டிலை தட்டி தூக்கியதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அடுத்தடுத்த இடங்களில், பாலா ரன் அப் வின்னராக இரண்டாவது இடமும், ரியோ மூன்றாவது இடமும், ரம்யா நான்காவது இடமும், சோம் சேகர் எவிக்ட் ஆனதும் தெரியவந்துள்ளது.
இதனால், நேர்மையான கருத்தை மட்டுமே ஆரம்பத்தில் இருந்தே எடுத்து வைத்த ஆரி பிக்பாஸ் டைட்டிலை வெற்றி பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.