பிக்பாஸ் சமீப நாட்களாக சக போட்டியாளர்கள் உள்ளே வாழ்ந்த தருணம் என சில காணொளியினை வெளியிட்டு போட்டியாளர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் மற்றவர்களை காயப்படுத்திய விதத்தில் போட்டியாளர்கள் நடந்து கொண்டதை பிக்பாஸ் வெளியிட்டார்.
இதனை அவதானித்த பின்பு, அனிதா மற்றும் ஆரியிடம் பேசிய சனம், நான் பல முறை உங்களை காயப்படுத்தி இருப்பேன். அதையெல்லாம் மறந்து மன்னித்துவிடுங்கள் காயப்படுத்தி கூறி ஆரிக்கு முத்தமிட்டார்.
அதன் பின்னர் பேசிய ஆரி, மறப்போம் மன்னிப்போம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பிரபல டிவி பிரபலம் இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார்.