அம்மாவ பத்தி ஏன் பேசின? பாலாவின் உண்மை சுயரூபம் வெளிச்சம்! வெளுத்து வாங்கி கிழித்துத் தொங்கவிட்ட ஷிவானி

Report
1119Shares

ஷிவானி நாராயணன் அம்மாவ பத்தி ஏன் பேசின என்றும் என்னைப் பத்தி தப்பா எப்படி பேசுவன்னும் பாலாவை வச்சு விளாசி விட்டார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் வரை பாலா பற்றி தெரியாமல், இருந்த ஷிவானி வெளியே சென்று திரும்பிய நிலையில், பாலாவை மொத்தமாக புரிந்து வைத்துக் கொண்டார்.

புறம் பேசும் பாலாவை சும்மா கேள்விகளால் ஷிவானி நாராயணன் கிழித்துத் தொங்கவிட்டதை பிக் பாஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வெளியே போன ஷிவானிக்கு பாலாவின் சுயரூபம் நல்லாவே தெரிந்து விட்டது. கொஞ்சம் கூட பாலாவை மதிக்காமல், அவரை அவாய்டு பண்ணது தெளிவாக தெரிந்தது. ஆனால், ஷிவானியை பின் தொடர்ந்து அவரிடம் பேச வேண்டும் என பாலா முயற்சித்ததை பார்த்த ஷிவானி, பாலா பண்ணிய காரியத்தை அவர் முன்பே கேட்டு விட்டார்.

பாலா உன் கூடத்தான நல்லா பேசிட்டு இருந்தேன்.. என்னப் பத்தியும் எங்க அம்மாவ பத்தி ஏன் அப்படியெல்லாம் நீ பேசின என ஷிவானி நாக்கை பிடுங்குவதை போல பாலாவிடம் கேட்க, ஒன்றுமே தெரியாத அப்பாவி போல பாலா நடித்ததை ஷிவானியே நம்பவில்லை.

ஷிவானி அப்படி கேட்ட உடனே மீண்டும் முந்திரிக்கொட்டை போல உங்க அம்மா பண்ணது தப்புன்னு சொன்னேன்.. உன் கிட்ட அவங்க அப்படி பேசியிருக்கக் கூடாதுன்னு தான் சொன்னேன், உன்னை தப்பா எங்கேயும் பேசல என மீண்டும் ஷிவானியின் அம்மாவை பற்றி பேசி வசமாக மாட்டிக் கொண்டார் பாலாஜி முருகதாஸ்.

இதுக்கு மேலும் ரசிகர்கள் பாலாவுக்கு ஓட்டுப் போட்டு டைட்டில் வின்னர் ஆக்கினால், அதை விட டிரெண்ட் செட்டிங் வேற எதுவுமே இருக்க முடியாது என பிக் பாஸ் ரசிகர்கள் பாலாவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.