பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரது கவனத்தைப் பெற்றவர் சுரேஷ் சக்ரவர்த்தி.
வயதில் மூத்தவராக இருந்தாலும் தனது அதிரடி யுத்திகள் மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
Insulted again
— Suresh Chakravarthy (@susrisu) January 13, 2021
உடனே அவரது ரசிகர்கள் விஜய் டிவிக்கு அவரை அழைக்கும் படி கோரிக்கைகள் கோரிக்கைகளை வைக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் அவர் "உங்கள் குரல்கள் கேட்கப்பட்டது பிக்பாஸ் நன்றி" என்று கூறியிருந்தார். எனவே அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் "என்னை மறுபடியும் அவமானப்படுத்தி விட்டார்கள்.
அவர்களுக்கு நான் வேண்டாமாம். எல்லாம் சரி. மதியாதார் தலைவாசல் மிதியாதே" என்று வேதனையுடன் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.