பிக்பாஸ் ஆரிக்கு ஆதரவாக பிரபல இசையமைப்பாளர் செய்த காரியம்... குஷியில் ரசிகர்கள்

Report
649Shares

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது மக்கள் மனதினை கொள்ளையிட்டுக் கொண்டிருக்கும் ஆரிக்கு ஆதரவாக, இசையமைப்பாளர் சத்யா ஆரிக்கு ஆதரவாக ஒரு பாடல் இசையமைத்துள்ளார்.

நடிகர் ஆரி., நெடுஞ்சாலை, மாஸ்கோவின் காதலி உள்ளிட்ட பட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸில் பிஸியாகவுள்ள ஆரிக்கு ஆதரவாக நெடுங்சலை, எங்கேயும் எப்போதும் பட இசையமைப்பாளர் சி. சத்யா பாடல் ஒன்றினை கம்போஸிங் செய்துள்ளார்.

இந்நிலையில் நட்பு ரீதியாக சி.சத்யா ஆரிக்காக இப்பாடலை இசையமைத்து நேற்று வெளியிட்டுள்ளார். வேற மாறி ஆரி என்ற இப்பாடல் வைரலாகி வருகிற்து.

அதில்’’ நேர்மை என்றால் ஆரி, உனை விரும்பும் நெஞ்சம் கோடி, மக்கள் இதயம் தேடி நீ வருவாய் வாகை சூடி’’ என்ற வரிகள் இடம்பெற்றது,. ஆரி ரசிகர்களுக்கு உற்சாகத்தை வரவழைத்துள்ளது.