என்னால ஆனதை பிரபா தாங்கினான்.. ஆரியிடம் கண்ணீர் விட்டு கதறி அழுத அனிதா..!

Report
994Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 100 நாட்களை கடந்து இறுதி வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

இதனிடையே போட்டியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பழைய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த அனிதாவை சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பிக்பாஸும் ஆறுதல் கூறினர்.

மேலும், ஆரியிடம் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்த அனிதா, ”உங்களிடம் நான் கத்தியது தவறு என்பதை நான் உணர்ந்துவிட்டேன், அதற்கு நான் மன்னிப்பும் கேட்டுவிட்டேன்.

ஆனால் அந்த மன்னிப்பையும் புரிந்து கொள்ளாமல் அதையும் கேலி, கிண்டல் செய்கின்றனர். என்னால் ஒரே நேரத்தில் அப்பா இறந்தது மற்றும் இந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் ஆகிய இரண்டையும் சமாளிக்க முடியவில்லை.

ஒரு பக்கம் பிரபா எல்லா நெகட்டிவ்ஸ்களையும் தாங்கினான். அவனுக்கு அவ்வளவு நெகட்டிவ் மெசேஜ்கள் வந்தன என ஆரியிடம் அனிதா புலம்பி தள்ளிவிட்டார்.

இதன்பின் பேசிய ஆரி, ‘நம்மை ஒருத்தர் குறை சொன்னால் அதை எடுத்து கொண்டு திருத்தி கொள்ளத்தான் நம்மால் முடியும்.

அதற்கு மேல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. பிளஸ் இருந்தாலும் அதை எடுத்து தனியாக வைத்துவிட்டு சரி எது, தவறு எது என நாமே முடிவு செய்து கொள்ள வேண்டும் என ஆறுதல் கூறினார்.

loading...