உங்க பேரு பாலாஜியா? இல்ல பாபுஜியா? முகத்திரையை கிழித்து அதிரடி காட்டிய சனம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆரி

Report
1299Shares

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தார்.

அவர் உள்ளே வந்தபோது போட்டியாளர்கள் அனைவரும் வெளியில் இருந்தனர். அப்போது திடீரென வந்த ரம்யா, சனமை பார்த்து எப்படி இருக்கீங்க? என கேட்டார்.

பதிலுக்கு சனம் இன்னைக்கும் உங்க முகத்துல தான் பர்ஸ்ட் முழிக்கிறேன் என அவர் காலை வாரினார்.

இதைக்கேட்ட ரம்யா ஆத்தீ மறுபடியுமா? என சிரித்துக்கொண்டே எஸ்கேப் ஆனார். தொடர்ந்து வெளியில் வந்து அனைவருடனும் சகஜமாக பேசிய சனம், ஆரியிடம் நான் உள்ள வந்ததே உங்களுக்காக தான் என கூற, பதிலுக்கு ஆரி முகத்திலும் மகிழ்ச்சி தென்பட்டது.

ரம்யா, சனம், சம்யுக்தா ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போது அங்கு வந்த பாலாஜி நான் மன்னிப்பு கேட்க விரும்புறேன் என சனமிடம் சொன்னார்.

பதிலுக்கு சனம் உங்க பேரு பாலாஜியா? இல்ல பாபுஜியா? என அவருக்கும் செம பதில் கொடுத்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் எங்க தலைவி எப்பவுமே வேற லெவல் என அவரை இந்தியளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


loading...