பொய் கூறி மாட்டிக்கொண்ட ஆரி... ரசிகர்கள் வெளியிட்ட குறும்படம்

Report
2702Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளராக மாறியிருக்கிறார் ஆரி. ஆரம்பத்தில் அவரை ஓவராக அட்வைஸ் செய்கிறார் என்று போட்டியாளர்கள் நாமினேட் செய்தாலும், இப்போது மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறார்.

முக்கியமாக ஆரி, பாலா சண்டை இப்பொழுது தல தளபதி ரசிகர் சண்டையை போல மாறி வருகிறது. இருவருக்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருப்பதால் ஆரிக்கு தற்போது ஆதரவு எகிறி வருகிறது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சிறிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஆரி கண் அசர்ந்து தூங்குவதையும், அருகில் அனிதா மற்றும் சனம் அதே போல் சாய்ந்து படுத்து இருப்பதையும் பார்க்க முடிகிறது.

உடனே நாய் குரைக்கும் சத்தம் கேட்டு, அந்த வீட்டின் துணை தலைவர் என்பதால் நிஷா எழுந்து வந்து 'யார் தூங்கியது' என்று கேட்டபொழுது ஆரி அனிதாவை பார்த்து கை நீட்டுகிறார்.

அதேபோல் பின்னாடியே ரமேஷ் வந்து ஆரி நீங்களா தூங்கியது என்று கேட்டதற்கு "நான் இல்லை" என்பது போல தலையை ஆட்டுகிறார்.

இந்த சிறிய சம்பவத்தில் அவர் பொய் சொன்னாரா என்பது போல் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவி வருகிறது.

You May Like This Video