பழம்பெரும் நடிகையின் கணவர் திடீர் மரணம்.. இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்கள்

Report
744Shares

ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்ட நடிகை ஜெயசித்ரா நடிகர் ஜெய்சங்கர், சிவகுமார், கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் அவர் 1983-ம் ஆண்டு கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு அம்ரீஷ் என்ற மகன் உள்ளார். அவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இசையமைப்பாளாகவும் உள்ளார்.

இந்நிலையில், ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் இன்று திருச்சியில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவரது மறைவிற்கான காரணம் குறித்து தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் நடிகர் ஜெயசித்ராவின் கணவர் மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You May Like This Video