சிறுத்தையை தலைதெறிக்க ஓடவிட்ட குரங்குகள்.. பார்வையாளர்களை வியக்க வைத்த வீடியோ

Report
427Shares

பொதுவாக காடுகள் மற்றும் காட்டு விலங்குகளைப் பற்றிய வீடியோ காட்சிகளுக்கு எப்போது மனிதர்களை ஈர்ப்பவையாக உள்ளன.

அதில், சிங்கம், புலி, சிறுத்தை போன்ற வேட்டை விலங்குகள் வேட்டையாடுகிற வீடியோக்களை ஆவலுடன் பார்க்கும் நிறைய பார்வையாளர்கள் உள்ளனர்.

அந்தவகையில், இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா 2020-ல் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பதிவிட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு நீர் நிலை அருகே சிறுத்தை ஒன்று தண்ணீர் குடிக்க செல்கிறது.

ஆனால், அங்கே சுற்றி இருந்த நிறைய குரங்குகள் கூட்டமாக சேர்ந்துகொண்டு சிறுத்தையைத் தாக்குவதற்கு பாய்ந்து துறத்த பயந்துபோன சிறுத்தை பதறி ஓடுகிறது. குரங்குகளும் சிறுத்தயை விடாமல் துரத்திச் செல்கின்றன.

இந்த காட்சி ட்விட்டரில் வைரலாகி வருவதை தொடர்ந்து பலரும் பல விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.