ஆரி இப்படியெல்லாம் செய்தார்.. டைட்டில் வின்னர் இவர்தான்.. பிக்பாஸ் சம்யுக்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

Report
3515Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய சம்யுக்தா ஆரியை பார்த்து வளர்ப்பு சரியில்லை என கூறிய வார்த்தையே அவர் வெளியேற்றத்திற்கு மிகப் பெரிய காரணமாக அமைந்தது என கூறலாம்.

தற்போது இணைய ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர் பேசியதாவது, அர்ச்சனா குரூப்பில் உள்ள யாரும் டைட்டிலை வின் செய்யக்கூடாது என்று பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்

மேலும், கமல்ஹாசன் முன் அர்ச்சனா குரூப்பில் மொத்தம் ஆறு பேர் இருப்பதாக பகிரங்கமாக தெரிவித்த சம்யுக்தா, வெளியே வந்த பின்னரும் அர்ச்சனா குரூப்பில் உள்ள யாரும் தப்பித்தவறி கூட டைட்டில் பட்டம் வென்று விட கூடாது என்று மறைமுகமாக தெரிவித்தார்.

இதன்பின்னர், ஆஜித்தை தனது மகன் போல் நினைத்தாலும் வீட்டை விட்டு வெளியே வரும்போது அவருக்கு அனைத்து காய்ன்களையும் கொடுத்தாலும் டைட்டிலை வின் பண்ணும் அளவுக்கு அவருக்கு திறமை இல்லை என்றும் சம்யுக்தா தெரிவித்துள்ளார்.

தன்னைப் பொறுத்தவரை ரம்யாவுக்கு தான் டைட்டில் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சம்யுக்தா கூறினார்.

மேலும், தனது போட்ட குறும்படம் ஒருதலை பட்சமானது என்றும் ஆரி சொன்னதிலும் தவறு இருக்கிறது என்றும் ஆரியின் தவறை கமலஹாசன் சுட்டி காண்பிக்கவே இல்லை என்றும் தனது ஆதங்கத்தையும் கூறினார்.

அதன்பின்னர், ஆரியை அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் பேசக்கூடாது எல்லாம் பேசிவிடடார். ஒரு பெண்ணிடம் எப்படி அப்படியெல்லாம் பேசலாம் என கூறியுள்ளார்.

loading...