படுக்கையில் சிரித்தபடி நயன்தாரா... முதுகில் வரையப்பட்ட டாட்டூ! தீயாய் பரவும் புகைப்படம்

Report
2207Shares

தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து தற்போது முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

மேலும் இவருக்கென ஹீரோக்களுக்கு இணையாக பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான படங்களில் நடித்து வந்த அவர் சமீபத்தில் ஆர். ஜே பாலாஜியுடன் இணைந்து அம்மனாக நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நயன்தாரா தனது முதுகில் பச்சை குத்திக் கொள்ளும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் இத்தகைய பெரிய டாட்டூ நிரந்தரமானதா? அல்லது ஏதேனும் படத்திற்காக தற்காலிகமாக போடப்பட்டதா? என தெரியாத நிலையில் இப்புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.

You May Like This Video