இதுக்கு மேல நான் யாருடையும் வாய்பேச விரும்பல.. ஆரியிடம் மீண்டும் மோதும் பாலா.. பரபரப்பு வீடியோ

Report
744Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 57 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது.

இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் சம்யுக்தா வெளியேறி இருந்தார்.

இதையடுத்து, நேற்றைய நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரம்யா, ஜித்தன் ரமேஷ், பாலாஜி ஆகிய மூவருக்கும் இந்த வார தலைவர் ஆகிய போட்டி நடைபெற்றது.

இதில் ஜித்தன் ரமேஷ் இந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இந்த வார நாமினேஷனில் ஆரி, சனம் ஷெட்டி, அனிதா, ஆஜித், சிவானி, ரம்யா, நிஷா ஆகிய 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதில் கண்டிப்பாக அஜித், சிவானி, நிஷா, அனிதா கண்டிப்பாக 4 பேருக்கு கடும் போட்டிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கால் சென்டர் டாஸ்கில் அடுத்த ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது அதில், ஆரிக்கு கால் செய்த பாலா அவர் மீது குற்றம் சாட்டுகிறார். அதற்கு ஆரி மறுப்பு தெரிவிப்பதுபோல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.