அடுத்த வார கேப்டன் யார் தெரியுமா? என்ன நடந்தது? பாலாஜிக்கு இந்த அசிங்கம் தேவைதான்!

Report
655Shares

கடந்த வாரம் சிறந்த பெர்பாமன்ஸ் கொடுத்த நபர்கள் அடிப்படையில் ஜித்தன் ரமேஷ், பாலாஜி, ரம்யா ஆகிய மூவரும் கேப்டன் பதவிக்கு போட்டியிட்டனர்.

பந்து டாஸ்க் ஒன்றை அளித்து 'தட்றோம் தூக்கறோம்' என பிக்பாஸ் அதற்கு பெயர் வைத்தார்.

இதில் மற்றவர்கள் பந்துகளை தட்டினால் மைனஸ் பாயிண்ட் கிடைக்கும் என செக் ஒன்றும் வைத்திருந்தார்.

போட்டியின் முடிவில் ஜித்தன் ரமேஷ் அதிகம் ஸ்கோர் செய்து வீட்டின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

ரம்யா இதில் பெரிதாக எந்த விவாதமும் செய்யவில்லை. ஆனால் தான் தோல்வி அடைந்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை போல.

மீண்டும், மீண்டும் தான் தவறு செய்யவில்லை என்றே சாதித்தார். அவர் அப்படி அடம் பிடித்தது ரசிகர்களை வெகுவாக எரிச்சலடைய வைத்தது.

இந்த நிலையில் நீங்க பண்ணது உங்களுக்கே திரும்பிருச்சு 'கர்மா இஸ் எ பூமராங்' என ரசிகர்கள் பாலாஜியை கலாய்த்து வருகின்றனர்.

சோம், சம்யுக்தா, பாலாஜி ஆகிய மூவரும் கேப்டன் பதவிக்காக இதேபோல பந்து டாஸ்க் விளையாடிய போது, பாலாஜி நியாயமாக விளையாடிய சோமை வீழ்த்த சம்யுக்தாவுக்கு உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.