லாஸ்லியாவிற்காக எங்கள் சட்டத்தை மாற்ற முடியாது.. அதிர்ச்சி முடிவால் கதறும் குடும்பம்

Report
1907Shares

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கலந்து கொண்டு பிரபலமானவர் தான் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா.

இவர், பிக்பாஸ் வீட்டில் கவினை காதலித்து பின்பு வீட்டில் எதிர்ப்பு இருந்து வந்ததது அனைவருக்கும் தெரியும்.

மேலும், கடந்த நாட்களுக்கு முன்பு இவரின் தந்தை மரியநேசன் கனடாவில் திடீரென மாரடைப்பால் இறந்தார்.

இதனையடுத்து, அவரின் உடலை இலங்கைக்குகொண்டு வருவதில் பல சவால்கள் உள்ளன. அதற்காக சில வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், சில போராட்டங்களுக்குப் பிறகு, லாஸ்லியா, தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் இழப்புக்கு துக்கம் அனுசரிக்க சென்னையிலிருந்து இலங்கைக்கு புறப்பட்டார், மேலும் அவர் ஓரிரு நாட்களுக்கு முன்பு இலங்கை அடைந்தார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, COVID-19 ன் ஆபத்து காரணமாக பிற நாடுகளிலிருந்து பயணிக்கும் எவருக்கும் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது இலங்கையில் கட்டாயமாகும்.

இந்த நேரத்தில் தனது தந்தையின் மரணத்தை நினைத்து வருத்தப்படுகையில், தனது சொந்த நாட்டை அடைந்திருந்தாலும் உடனடியாக தனது குடும்பத்தினரை சந்திக்க முடியவில்லை என்று லாஸ்லியா மட்டுமின்றி குடும்பே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.