பிக்பாஸ் நிஷாவை ஒற்றை வார்த்தையில் அவமானப்படுத்திய சுரேஷ்.. வாயடைத்துபோன ரசிகர்கள்

Report
1086Shares

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியானது 56 நாட்களை கடந்துவிட்டது. மற்ற சீசன்களை விட இந்த 4 சீசன் பெரிய அளவில் இல்லை என பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.

இதனால், பிக்பாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரியை அனுப்பியும் ஒரு சுவாரசியமும் இல்லாமல் போய்விட்டது.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில், குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் சம்யுக்தா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

மேலும், ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி திரும்ப ரீ எண்ட்ரி கொடுப்பதாக தகவல் வெளியானது.

இதன்பின்னர், சுரேஷ் சக்கரவர்த்தி தனது கருத்துகளை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று நிஷாவுக்கு பிக்பாஸ் விளையாட்டு என்றால் என்ன? என்பதையும், அவர் ஏன் இன்னொருவரை சார்ந்து விளையாடுகிறார் என்பதையும் கமல்ஹாசன் புரிய வைத்தார்.

நான் யாரையும் சார்ந்து விளையாடவில்லை என்று கூறி வந்த நிஷாவிற்கு கமலின் பேச்சு சாட்டையடியாகவே பார்க்கப்பட்டது.

தற்போது நிஷா குறித்து சுரேஷ் சக்கரவர்த்தி ஒரே ஒரு வார்த்தையில் விமர்சனம் செய்துள்ளார். அவர் ’நிஷா.. வேஷம்’ என்று கூறியுள்ளார்.

வெளியில் கலகலப்பாக பார்த்த நிஷா எங்கு சென்றார் என பலரும் தேடி கொண்டிருக்கும் நிலையில், ஒற்றை வார்த்தையில் நிஷாவை பற்றி துல்லியமாக கனிந்துள்ள சுரேஷ் சக்ரவர்த்தியை பலர் பாராட்டியும் வருகிறார்கள்.