முழுகவச உடையில் அவசரமாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்... மக்களின் கேள்விக்கு பிரபல ரிவி கொடுத்த பதில்
பிக்பாஸ் வீட்டிலிருந்து போட்டியாளர்கள் நிவர் புயல் காரணமாக பிரபல ஹொட்டலுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் அதனை பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே போட்டுக் காட்டியுள்ளனர்.
இரவு 7 மணிக்கு போட்டியாளர்கள் அனைவரும் முழுகவச உடையுடன், தங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.
பின்பு காலை 8.30 மணியளவில் போட்டியாளர்கள் உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு பிரபல ரிவியில் ஒளிபரப்புவார்களா? என்ற மக்களின் கேள்வி தற்போது உண்மையாகி நேற்றைய தினத்தில் அதனை ஒளிபரப்பவும் செய்துள்ளனர்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் நிவார் காரணமாக போட்டியாளர்கள் அனைவரும் எலிமினேட் செய்யப்பட்டதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
இதற்குமுன் மூன்று சீஸன்களிலும் இதுபோன்ற எந்தவொரு இயற்கை பேரிடரும் இல்லை என்பதால் இதுவே போட்டியாளர்கள் அனைவரும் முதன்முறையாக வெளியேறிய சம்பவமாக உள்ளது.
நிவர் புயல் காரணமாக அனைவரும் எலிமினேட் செய்யப்படுகிறீர்கள் 🤣🤣#BiggBossTamil4 @vijaytelevision pic.twitter.com/XjgRcm5SZm
— Manikandan ✨ (@Manimadurai0505) November 27, 2020
You May Like This Video