கேமரா முன் கதறிய போட்டியாளர்கள்.. வெள்ளம் புகுந்த பிக்பாஸ் வீட்டின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

Report
2505Shares

நிவர் புயலானது சென்னையில் உள்ள அனைத்து இடங்களில் வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதுபோன்ற காட்சிகள் காட்டப்படாமல் இருந்தன. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று இரவு சுமார் 9 ஆயிரம் கன அடி வினாடிக்கு திறந்துவிடப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட் போடப்பட்டுள்ளது.

அதன்பின்னர் பிக்பாஸ் வீட்டில் வெள்ளம் புகுந்ததாகவும், இதனால் போட்டியாளர்கள் பயந்து வெளியேற வேண்டும் என கதறியதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

மேலும், அவர்களை சமாதானப்படுத்தி பிக்பாஸ் ஹோட்டல் அறையில் தங்க வைக்கப்பட்டதாகவும் வெளியானது.

இந்நிலையில், தற்போது வெளியான தகவலின் படி, பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து 6 மணி நேரம் வேலை செய்து தண்ணீரை வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

மேலும், போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து பதற்றதுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட காணொளியின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்...

loading...