வெளியில் சென்ற சுசித்ரா பிக் பாஸில் இருந்து கையோடு எடுத்து சென்றது என்ன தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

Report
1563Shares

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இரண்டாம் வைல்டு கார்டு போட்டியாளரான சுசித்ரா 50வது நாளான கடந்த ஞாயிற்று கிழமை போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது கண்டிப்பாக நிகழ்ச்சியில் எதாவது ஒரு சுவாரசியத்தை கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் இந்த வாரம் ரசிகர்கள் வழியனுப்பி வைத்துவிட்டார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறிய போது போட்டியாளர்கள் பற்றி புட்டு புட்டு வைத்துவிட்டு தான் சென்றார்.

அதே போல சமூக வலைத்தளத்தில் இவர் தைரியமாக பல சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் விமர்சித்து இருக்கிறார்.

பிக் பாஸில் இருந்து வெளியேறிய அடுத்த நாளே இவர் தொடர்ந்து பதிவுகளை போட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது பிக் கையில் வைத்துக்கொண்டு இருந்த ஸ்மைலி அட்டையை எடுத்து சென்று உள்ளார்.

அதில் மிர்ச்சி சுச்சி என்பதை குறிக்கும் வகையில் மைக் மற்றும் ரேடியோ மிர்ச்சி லோகோவையும் வரைந்து வைத்துள்ளார். குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

You May Like This Video