பிளான் போட்டு தட்டி தூக்கிய அனிதா.. நள்ளிரவில் அம்பலமான உண்மை! சூடுப்பிடிக்கும் ஆட்டம்

Report
1817Shares

பிக்பாஸ் வழங்கிய நாமினேஷன் பாஸை அனிதா பிளான் போட்டு கைப்பற்றிய உண்மை அம்பலமாகியுள்ளது.

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக இந்த பாஸ் வழங்கப்பட்டது.

இதில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றவர்கள் பங்கேற்றனர். அதன்படி, பாலஜி, ஜித்தன் ரமேஷ், சோம் சேகர், ஆரி, சனம் ஷெட்டி, அனிதா மற்றும் நிஷா ஆகிய 7 பேர் பங்கேற்றனர்.

7 பேரில் அந்த பாஸை பெறும் ஒரு போட்டியாளர், நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம். தப்பிக்கும் அந்த நபர் அவருக்கு பதிலாய் மற்றொருவரை நாமினேட் செய்யலாம். இதற்கான போட்டி ஆக்டிவிட்டி ஏரியாவில் நடந்தது.

இந்த போட்டியில் இருந்து பாலாஜி, ஆரி, சோம், ரமேஷ் ஆகியோர் விலகினர். அனிதா, நிஷா, சனம் ஷெட்டி ஆகியோர் விடாப்பிடியாக விளையாடினர். இதில் முதலில் மெஜாரிட்டியான வாக்குகளை பெற்றது நிஷாதான்.

அப்போதும் அனிதா விட்டுக்கொடுக்கவில்லை. எனக்கு வேண்டும் என்று பிடிவாதமாக நின்றார். பின்னர் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு, நீங்களே வச்சுக்கோங்க, கேம்ம முடிக்கணும் என்று நிஷாவிடம் கொடுத்தார்.

இதனால் கடுப்பான நிஷா, நீ என்ன எனக்கு பிச்சை போடுறீயா? இந்த மாதிரி சொல்லிட்டு கொடுக்காத, அப்படின்னா நீயே வச்சுக்கோ எனக்கு மக்கள் மேல நம்பிக்கை இருக்கு என்றார். இதனை தொடர்ந்து அதனை வாங்க சம்மதித்த அனிதா, சந்தோஷமாய் கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டு நாமினேஷனில் இருந்து தப்பினார்.

மேலும் சம்யுக்தாவை நாமினேட் செய்துவிட்டு எஸ்கேப்பாகி விட்டார். இந்நிலையில் இதுகுறித்து மிட் நைட்டில் பாலாஜியுடன் பேசிக்கொண்டிருந்தார் அனிதா. அப்போது நீ அல்லது சனம் விட்டுக்கொடுத்திருக்கலாம் என்றார் பாலாஜி.

அதற்கு பதில் சொன்ன அனிதா, அதுதான் என் ஸ்ட்ரேட்டர்ஜி. அது நிஷாவுக்கு கிடைச்சுருந்தா, ஆஜித்தான் நாமினேட் பண்ணியிருப்பாங்க. சனம்க்கு கிடைச்சுருந்தா ஷிவானியதான் வெளியே அனுப்பியிருப்பார். சம்யுக்தா ஃபேக்கா விளையாடுறாங்க, அவங்கள வெளியே அனுப்பனும்னுதான் நான் அந்த பாஸை வாங்கினேன்.

நான் நாமினேட் ஆகாமல் இங்கே இருந்தால் தான் அவர்களை வச்சு செய்ய முடியும். அதற்காகதான் நாமினேஷன் பாஸை வாங்கினேன் என பச்சையாக கூறினார். ஆக ஸ்கெட்ச் போட்டு எப்படி சொன்னால் அது தனக்கே கிடைக்கும் என பிளான் பண்ணி நாமினேஷன் டாப்புள் பாஸை தட்டி தூக்கியுள்ளார் அனிதா என்பது அம்பலமாகியுள்ளது.

loading...