மூக்குத்தி அம்மன் மூலமாக தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை ஊர்வசியின் கடந்த கால வாழ்க்கை பலரையும் சங்கடத்தினை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகில் கொடிகட்டி பறந்த ஊர்வசி 2000ம் ஆண்டு மலையாள நடிகர் மனோஜ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். பின்பு 8 வருடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
இவர்களுக்கு குஞ்சட்டா என்ற மகள் இருந்த நிலையில், மகளை மனோஜ் அழைத்துச் சென்றுவிட்டார். அப்போது இவரது இந்த வாழ்க்கை பிரச்சினை நீதிமன்றம் சென்றது.
இந்நிலையில் 2013ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான சிவபிரசாத்தை ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்தார். பின்பு 46 வயதில் கர்ப்பமான ஊர்வசி 2014ம் ஆண்டு ஆண்குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
தற்போது மகனின் முகத்தினை பார்த்து சோகத்தினை மறந்து வாழ்ந்து வருகின்றார் ஊர்வசி. இவரது மகள் குஞ்சட்டாவும் அழகில் அம்மாவை மிஞ்சி இருக்கின்றார்.