பிக் பாஸில் ஏற்பட போகும் அதிரடி திருப்பம்! அனிதாவுக்கு அடித்த ஜாக்பாட்... உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

Report
660Shares

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் மொத்தம் 7 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் வாரம்தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இன்றும் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது.

இதில் சோம், பாலா, ஆரி, ரமேஷ், அனிதா, சனம், நிஷா ஆகிய 7 பேர் இடம் பிடித்தனர். அவர்களில் பாலாஜி ரூல்ஸை பிரேக் பண்ணுவதாகவும், ரமேஷ் சேஃப் கேம் விளையாடுவதாகவும், சனம் சீன் கிரியேட் பண்ணுவதாகவும் சக ஹவுஸ்மெட்ஸ் காரணங்களை கூறினர்.

நாமினேட் ஆனவர்களை காரணத்துடன் அறிவித்தார் பிக்பாஸ். இதனை தொடர்ந்து எவிக்ஷன் ஃபிரி பாஸை போன்று பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நாமினேஷன் டாப்புள் பாஸை அறிவித்தார் பிக்பாஸ்.

இந்த டாஸ்க்கில் நாமினேட் ஆன 7 பேர் பங்கேற்றனர். அவர்களில் இறுதி வரை நிற்கும் போட்டியாளர் நாமினேஷன் டாப்புள் கார்டை கைப்பற்றி நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம்.

மேலும் அந்த நபர் தனக்கு பதிலாய் நாமினேஷனில் இல்லாத ஒருவரை நாமினேட் பண்ணலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதில் இருந்து பாலா, ஆரி, ரமேஷ், சோம் ஆகியோர் விலக, நிஷா, அனிதா, சனம் ஆகியோர் விடாப்பிடியாக இருந்தனர்.

ஒருக்கட்டத்தில் நிஷாவும் சனமும் விட்டுக்கொடுக்க இதில் அனிதா வெற்றி பெற்றார். இதனால் நாமினேஷனில் இருந்து தப்பித்தார் அனிதா.

மேலும் டாப்புள் பாஸுடன் வீட்டுக்குள் சென்ற அனிதா சம்யுக்தாவை நாமினேட் செய்தார். இதன் மூலம் இந்த வாரம் முதலில் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெறாத சம்யுக்தா அனிதா மூலம் நாமினேஷனில் சிக்கினார்.