மீண்டும் சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்... எதிர்பாராததை எதிர்பாருங்கள்! அடுத்த வாரம் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Report
682Shares

பிக்பாஸ் வீட்டில் தற்போது அனிதா, அர்ச்சனா, ஆரி, ஆஜீத், பாலாஜி முருகதாஸ், கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், நிஷா, ரியோ ராஜ் , சோமசேகர், சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய 14 போட்டியாளர்கள் உள்ளனர்.

தீபாவளி உள்ளிட்ட இரண்டு வாரங்கள் பிக்பாஸில் எவிஷன் நடைபெறவில்லை என்பதால், சுச்சி வெளியேறியும் கூட தற்போது வீட்டின் உள்ளே 14 பேர் இருக்கின்றனர்.

இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுச்சி என நான்கு பேர் மட்டுமே வெளியேறி இருக்கின்றனர்.

அதே நேரம் 50 நாட்களை பிக்பாஸ் கடந்து விட்டது. தற்போது அஸீம் வேறு உள்ளே எண்ட்ரி கொடுத்துள்ளார். இனி மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளதாக பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

இதனால் வரும் வாரம் இரண்டு பேர் வீட்டைவிட்டு வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் இதை எதிர்பார்த்து காத்திருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.