சுச்சி எவிக்ஷனுக்கு பின்னணியில் இப்படியொரு பிரச்சினையா?.. லீக்கான பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறிய கதை

Report
3875Shares

பிக்பாஸ் வீட்டில் இருந்து சுச்சி வெளியேற்றபட்டதன் பின்னணியில் உள்ள பரபரப்பு காரணம் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இரண்டாவது வைல்ட் கார்டு என்ட்ரியாக பங்கேற்றவர் சுச்சி. பிரபல பாடகி, ஆர்ஜே, நடிகை, தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இதனால் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. சுச்சியின் இந்த செயலுக்கு எதிர்ப்புகள் எழவே தனது டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்றார்.

அவரது கணவரான கார்த்திக் சுச்சிக்கு மனநிலை சரியில்லை என்று கூறி விவாகரத்து செய்தார். திரைத்துறையை சேர்ந்த நட்பு வட்டத்தால் ஓரங்கப்பட்ட சுச்சி மன அழுத்தத்துக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 3 வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சுச்சி, பாலா மீது மட்டும் அளவுக்கதிகமாக அன்பு வைத்திருந்தார். இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் சுச்சி வெளியேற்றத்தை காண மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மேலும் சுச்சி பிக்பாஸ் வீட்டிற்குள் திடீர் அழுகை, அலறல் என்று இருந்துள்ளதாகவும் நார்மலாக இல்லை என்பதால் சக போட்டியாளர்கள் அவரிடம் பேசுவதற்கு அச்சம் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

தற்போது சுச்சியை வெளியேற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்பு பிரபல ஹொட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட சுச்சி அங்கிருந்து தன்னை யாரோ கொலை செய்ய வருவதாக அலறியடித்து வெளியே வந்ததாக செய்திகள் வெளியாகின.

இதே போன்று பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் இதே வேலையை செய்ததாக தகவல் கசிந்துள்ளது. பிக்பாஸையும் அடிக்கடி பேச வேண்டும் எனக்கூறி நச்சரித்துள்ளார்.

திடீர் திடீரென கத்துவது, அழுவது, அலறுவது என இருந்துள்ளார். மேலும் பிக்பாஸிடமும் அது வேண்டும் இது வேண்டும் என் கேட்டு தொல்லை செய்து வந்துள்ளார். மேலும் எப்போதும் தனியாக ஒதுக்கப்பட்டிருக்கும் அறையிலேயே அமர்ந்துள்ளார்.

அவரது நடவடிக்கையால் ஹவுஸ் மெட்ஸ் மட்டுமின்றி நிகழ்ச்சி குழுவும் பெரும் குடைச்சலில் இருந்து வந்துள்ளதால் இன்று வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

loading...